நாணயம் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : நாணயம்1நாணயம்2

நாணயம்1

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  செலாவணிக்கு உரிய மதிப்புடன் அரசினால் வெளியிடப்படும், முத்திரை கொண்ட உலோக வில்லை; காசு.

  ‘ஐந்து ரூபாய் நாணயம்’
  ‘சோழர் கால நாணயங்கள்’

 • 2

  (ஒரு நாட்டில்) செலாவணிக்காக அமலில் இருக்கும், அரசினால் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் பணம்.

  ‘இந்திய நாணயத்தின் பெயர் ரூபாய் ஆகும்’
  ‘இலங்கை நாணயத்தின் பெயரும் ரூபாய்தான்’

நாணயம் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : நாணயம்1நாணயம்2

நாணயம்2

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  கொடுத்த வாக்கைக் காப்பாற்றுதல், பிறரை ஏமாற்றமல் இருத்தல் முதலான நேர்மை.

  ‘நாணயமான முறையில் வாழ்க்கை நடத்துவதில் பெருமிதம் உண்டு’
  ‘அவருடைய நாணயத்தில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு’