தமிழ் நாதி யின் அர்த்தம்

நாதி

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் எதிர்மறைச் சொற்களோடு) (ஒருவர்மீது அக்கறை செலுத்திப் பாதுகாக்கவும் கவனிக்கவும் கூடிய) நபர்; ஆள்.

    ‘உன்னை அடித்துப் போட்டால்கூடக் கேட்க நாதி இல்லை’
    ‘உனக்கும் அவரை விட்டால் வேறு நாதி இல்லை’
    ‘எப்படி வாழ்ந்தவர்! இன்று நாதியற்றுக் கிடக்கிறார்’