தமிழ் நான்கு சுவர்களுக்குள் யின் அர்த்தம்

நான்கு சுவர்களுக்குள்

வினையடை

  • 1

    (‘வெளி உலகம்’ என்பதிலிருந்து வேறுபடுத்திக் காட்ட வேண்டிய சூழ்நிலையில்) குறிப்பிட்ட இடத்திற்குள்.

    ‘நான்கு சுவர்களுக்குள் நடந்த இந்த விஷயம் வெளியே எப்படித் தெரிந்தது?’
    ‘இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இப்படி நான்கு சுவர்களுக்குள்ளேயே அடைந்து கிடக்கப்போகிறாய்?’