தமிழ் நாயகன் யின் அர்த்தம்

நாயகன்

பெயர்ச்சொல்

 • 1

  (கதை, காவியம் போன்றவற்றில்) முக்கிய ஆண் பாத்திரம்; கதாநாயகன்.

  ‘காவிய நாயகன்’
  ‘இந்தத் திரைப்படத்தில் நாயகன் ஒரு சமூகச் சீர்திருத்தவாதியாக வருகிறான்’
  ‘காந்தி வரலாற்று நாயகனாக விளங்குகிறார்’

 • 2

  உயர் வழக்கு தலைவன்.

  ‘நாயகன் நாயகியைப் பார்த்துப் பாடும் பாட்டு’
  ‘நாயகி தன் தோழியை நாயகனிடம் தூது அனுப்பும் பாவனையில் இப்பாடல் அமைந்துள்ளது’

 • 3

  (ஒரு நிகழ்ச்சி, விழா போன்றவற்றின்) மையமாகக் கருதப்படுபவர்.

  ‘இந்த விழாவின் நாயகன் இவர்தான்’