நாளை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

நாளை1நாளை2

நாளை1

பெயர்ச்சொல்

 • 1

  ‘இன்று’ என்று குறிப்பிடப்படும் நாளுக்கு அடுத்த நாள்.

  ‘இன்றும் நாளையும் பள்ளி விடுமுறை’
  ‘நாளையிலிருந்து கல்லூரிக்குச் செல்வேன்’
  ‘நாளையோடு என் பணி முடிந்துவிடும்’

 • 2

  எதிர்காலம்.

  ‘நாளை என்பது நம் குழந்தைகள் கையில்’

நாளை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

நாளை1நாளை2

நாளை2

வினையடை

 • 1

  ‘இன்று’ என்று குறிப்பிடப்படும் நாளுக்கு அடுத்த நாளில்.

  ‘இன்று பணம் இல்லை; நாளை வா’

 • 2

  எதிர்காலத்தில்.

  ‘நாளை என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்?’
  ‘இன்று நீ செய்யும் தவறுக்கு நாளை பதில் சொல்லவேண்டியிருக்கும்’