தமிழ் நாள் குறி யின் அர்த்தம்

நாள் குறி

வினைச்சொல்குறிக்க, குறித்து

 • 1

  (மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு) பொருத்தமான நேரத்தைத் தேர்ந்தெடுத்தல்.

  ‘என் திருமணத்திற்கு நாள் குறித்தாகிவிட்டது’
  ‘கடைக்கால் போடுவதற்கு நாள் குறித்துவிட்டாயா?’

 • 2

  (ஒருவரைக் கொலை செய்ய அல்லது வேலையை விட்டு நீக்க) நாளை முடிவு செய்தல்.

  ‘அவனுடைய எதிரிகள் அவனுக்கு நாள் குறித்துவிட்டார்கள். கொஞ்ச காலம் அவன் கண்காணாமல் எங்காவது சென்றுவிடுவது நல்லது’
  ‘அந்த ஆளுக்கு நாள் குறித்துவிட்டது நிர்வாகம். அவனுடைய ஆட்டமெல்லாம் இன்னும் கொஞ்ச நாள்தான்’