தமிழ் நிகழ்த்து யின் அர்த்தம்

நிகழ்த்து

வினைச்சொல்நிகழ்த்த, நிகழ்த்தி

 • 1

  (அற்புதம், சாதனை முதலியவை) உண்டாகுமாறு செய்தல்.

  ‘கால்பந்தாட்டத்தில் பீலே நிகழ்த்திய சாதனைகள் ஏராளம்’
  ‘இறைவன் நிகழ்த்திய அற்புதங்கள்’

 • 2

  (உரை, சொற்பொழிவு ஆகியவற்றை) வழங்குதல்; (விவாதம்) நடத்துதல்.

  ‘குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்துவார்’
  ‘எழுத்துச் சீர்திருத்தம்பற்றிய விவாதங்கள் இப்போது அதிக அளவில் நிகழ்த்தப்படுகின்றன’