தமிழ் நிகழ்வு யின் அர்த்தம்

நிகழ்வு

பெயர்ச்சொல்

 • 1

  (வாழ்க்கையில் இயற்கையாக) நிகழ்வது; நடைபெறுவது.

  ‘பிறப்பு, இறப்பு என்ற இரு நிகழ்வுகளுக்கு இடையே நடைபெறுவதுதான் வாழ்க்கை’

 • 2

  நிகழ்ச்சி; சம்பவம்.

  ‘உண்மையான நிகழ்வு’
  ‘சுவர் முழுக்கக் காமராஜரின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை விளக்கும் புகைப்படங்கள் காணப்பட்டன’
  ‘இந்த நாவலில் பல விதமான நிகழ்வுகளை ஆசிரியர் நுணுக்கமாக விவரித்துள்ளார்’
  ‘தகவல் தொழில்நுட்பத் துறையின் நிகழ்வுகளை நான் உன்னிப்பாக கவனித்து வருகிறேன்’
  ‘எப்போதோ நடந்து முடிந்த நிகழ்வுகளையெல்லாம் மறக்காமல் நினைவில் வைத்திருக்கிறாள்’

 • 3

  (விழா, கூட்டம், நாடகம் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டு) நடத்தப்படுவது அல்லது நிகழ்த்தப்படுவது.

  ‘இந்த நிகழ்வில் கல்லூரி மாணவர்களும் பங்கேற்கின்றனர்’
  ‘சர்வதேச நிகழ்வுகள்’
  ‘பிரபல பரதக் கலைஞர்கள் நடனம் ஆடும் நிகழ்வு’

 • 4

  வழக்கமானதாக இல்லாமல் புதுமையானதாகவோ விசித்திரமானதாகவோ நிகழ்வது.

  ‘பிரபஞ்சம் என்பதே ஒரு பெரும் வெடிப்புக்குப் பிறகு உருவான ஒரு நிகழ்வு என்பதை இப்போது விஞ்ஞானிகள் மறுஆய்வு செய்கின்றனர்’
  ‘அறிவியலால் ஏற்றுக்கொள்ளப்படாத நிகழ்வுகள் ஏராளம்’
  ‘அதீதமான நிகழ்வுகளை இயற்கையின் விந்தை என்று கூற முடியுமா?’

 • 5

  (இயற்பியல், வேதியியல், உயிரியல் அடிப்படையில்) நிகழ்வது.

  ‘முப்பட்டகத்தின் வழியாக ஒளிக்கதிர் செல்லும்போது அது ஏழு வண்ணங்களாகப் பிரியும் நிகழ்வு ‘நிறப்பிரிகை’ எனப்படும்’
  ‘வளர்சிதை மாற்றம் என்பது உடம்பில் நிகழும் வேதியியல் நிகழ்வுகளைக் குறிக்கிறது’