தமிழ் நிமித்தம் யின் அர்த்தம்

நிமித்தம்

பெயர்ச்சொல்

 • 1

  நிகழப்போவதை உணர்த்துவதாகக் கருதப்படும் சம்பவம், சமயம் போன்ற குறிப்பு.

  ‘அவர் நம் வீட்டுக்கு வந்ததை ஒரு நல்ல நிமித்தமாகவே கருதலாம்’

தமிழ் நிமித்தம் யின் அர்த்தம்

நிமித்தம்

வினையடை

 • 1

  பொருட்டு; காரணமாக; முன்னிட்டு.

  ‘அலுவல் நிமித்தம் நான் வெளியூர் செல்கிறேன்’
  ‘அவர் முதல்வரைச் சந்தித்தது வெறும் மரியாதை நிமித்தம் என்று கூற முடியாது’