தமிழ் நிமிர்த்து யின் அர்த்தம்

நிமிர்த்து

வினைச்சொல்நிமிர்த்த, நிமிர்த்தி

 • 1

  (தலையை, நெஞ்சை) இருக்கும் நிலையிலிருந்து உயர்த்துதல்.

  ‘குனிந்து எழுதிக்கொண்டிருந்தவன் தலையை நிமிர்த்தி என்னைப் பார்த்தான்’
  ‘கூனிக்குறுகாமல் நெஞ்சை நிமிர்த்தி நில்’

 • 2

  (வளைந்திருக்கும் அல்லது மடங்கியிருக்கும் ஒன்றை) நேராக்குதல்.

  ‘கம்பியை நிமிர்த்தப்போய்க் கையைக் கிழித்துக்கொண்டாயா?’

 • 3

  (சாய்ந்த அல்லது கவிழ்ந்த நிலையில் இருக்கும் ஒன்றை) நேரான நிலைக்குக் கொண்டுவருதல்.

  ‘கவிழ்ந்து கிடந்த வண்டியைக் கிராமத்து மக்கள் நிமிர்த்தினார்கள்’
  ‘தவலையை நிமிர்த்தி வைக்கக்கூடாதா?’