தமிழ் நிரப்பு யின் அர்த்தம்

நிரப்பு

வினைச்சொல்நிரப்ப, நிரப்பி

 • 1

  (திணித்தல், அடைத்தல், உட்செலுத்துதல், வைத்தல் போன்ற முறைகளில் ஒரு பரப்பை அல்லது ஒன்றின் உள்பகுதியைத் திட, திரவ, வாயுப் பொருள்களால்) நிறைத்தல்.

  ‘தண்ணீர் வந்தால் தொட்டியை நிரப்பிவை!’
  ‘மண்ணைப் போட்டு இந்தப் பள்ளத்தை நிரப்பு’
  ‘பேனாவில் மையை நிரப்பு’
  ‘ஓவியங்களாக வாங்கி வீட்டை நிரப்பி இருக்கிறான்’
  ‘சமையல் எரிவாயு நிரப்பும் ஆலை ஏப்ரல் மாதம் திறக்கப்பட இருக்கிறது’
  உரு வழக்கு ‘மறைந்த தலைவரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது’

 • 2

  (துப்பாக்கியில் உரிய துளைகளில் தோட்டாக்களை) போடுதல்.

  ‘துப்பாக்கியில் தோட்டாக்களை நிரப்பும் வேலையை ஜாக்கிரதையாகச் செய்ய வேண்டும்’

 • 3

  (விண்ணப்பம், கேள்வித்தாள் முதலியவற்றை) தேவையான தகவல் தந்து முழுமையாக்குதல்; பூர்த்திசெய்தல்.

  ‘இந்த விண்ணப்பத்தை நிரப்பிக் கொடுங்கள்’
  ‘கேள்வித்தாளில் கோடிட்ட இடங்களை நிரப்புக’

 • 4

  (ஒரு அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடத்திற்குப் பணியாளர்களை) அமர்த்துதல்/(ஒரு கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு மாணவர்களை) சேர்த்தல்.

  ‘சுகாதாரத் துணை ஆய்வாளர் பதவிகள் நிரப்பப்படாமலேயே உள்ளன’
  ‘இந்த ஆண்டு தனியார் பொறியியல் கல்லூரிகளில் பெரும்பாலான இடங்கள் நிரப்பப்பட்டுவிட்டன’

 • 5

  (புத்தகம், பத்திரிகை முதலியவற்றில்) குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இல்லாதவற்றைக் கொண்டு நிறைத்தல்.

  ‘பக்கங்களை நிரப்பிவைத்திருக்கிறாரே தவிர இவருடைய கதையில் எந்த சுவாரசியமும் இல்லை’
  ‘பத்திரிகைகளில் பக்கத்தை நிரப்புவதற்காகத் துணுக்குகளை வெளியிடுகிறார்கள்’