தமிழ் நிறைவுசெய் யின் அர்த்தம்

நிறைவுசெய்

வினைச்சொல்-செய்ய, -செய்து

 • 1

  (தேவை, நோக்கம் போன்றவற்றை) பூர்த்தி செய்தல்; நிறைவேற்றுதல்.

  ‘தேவைகளை நிறைவுசெய்துகொள்ளவே மனிதன் புதிதுபுதிதாக இயந்திரங்களையும் தொழில்நுட்பங்களையும் கண்டுபிடித்தான்’
  ‘கிராமங்கள் தங்கள் அனைத்துத் தேவைகளையும் தாங்களே நிறைவுசெய்து கொள்ள வழிவகுக்க வேண்டும்’
  ‘மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவுசெய்யப்படாமல் இருக்கின்றன’
  ‘மக்களின் புரதத் தேவையை நிறைவுசெய்யும் பாரம்பரிய உணவாக மீன் இருந்துவருகிறது’

 • 2

  முடிவடைய அல்லது முழுமை அடையச் செய்தல்.

  ‘யுவராஜ் சிங் தனது ஏழாவது சதத்தை நிறைவு செய்தார்’
  ‘தலைவர் தனது சுற்றுப்பயணத்தை நாளை நிறைவுசெய்கிறார்’