தமிழ் நிலைகுலை யின் அர்த்தம்

நிலைகுலை

வினைச்சொல்-குலைய, -குலைந்து

  • 1

    கட்டுப்பாட்டுடன் இருக்கும் சமநிலையை இழத்தல்; சீர்கெடுதல்; சீர்குலைதல்.

    ‘சாலையின் குறுக்கே குழந்தை ஓடி வந்ததும், சைக்கிளைத் திடீரென்று நிறுத்தியதில் நிலைகுலைந்து விழுந்தான்’
    ‘துக்கச் செய்தியைக் கேட்டதும் நிலைகுலைந்துபோனாள்’
    ‘அளவுக்கு அதிகமாக இறக்குமதி செய்வதால் உள்நாட்டுப் பொருளாதாரம் பெரிதும் நிலைகுலைகிறது’