தமிழ் நிலைநாட்டு யின் அர்த்தம்

நிலைநாட்டு

வினைச்சொல்-நாட்ட, -நாட்டி

  • 1

    (ஒரு நிலைமை, தன்மை போன்றவை ஒன்றில்) நிலைத்து இருக்கும்படியோ வலுவடையும்படியோ செய்தல்; நிலைநிறுத்துதல்.

    ‘கலவரம் நடக்கும் பகுதியில் அமைதியை நிலைநாட்ட ராணுவம் அனுப்பப்பட்டுள்ளது’
    ‘இது மனித உரிமைகளை நிலைநாட்ட நடக்கும் போராட்டம்’
    ‘அவர் இந்தக் கட்டுரையில் பாரதிதாசனைப் பற்றிய தன் கருத்துகளைத் திறம்பட நிலைநாட்டுகிறார்’