தமிழ் நிலையம் யின் அர்த்தம்

நிலையம்

பெயர்ச்சொல்பெரும்பாலும் பிற சொற்களோடு இணைந்து

 • 1

  மக்களுக்குக் குறிப்பிட்ட சேவையை அளிக்க அமைந்திருக்கும் இடம்.

  ‘தொலைக்காட்சி நிலையம்’
  ‘வானொலி நிலையம்’

 • 2

  (போக்குவரத்து வாகனங்களைக் குறித்து வரும்போது) பயணிகளை அல்லது சரக்குகளை ஏற்றிச்செல்வதற்கு ஏற்ற முறையில் அமைக்கப்பட்டிருக்கும் இடம்.

  ‘பேருந்து நிலையம்’
  ‘ரயில் நிலையம்’

 • 3

  மக்களுக்குத் தேவையான பணிகளைத் தொழில்முறையில் மேற்கொள்ளும் இடம்.

  ‘மிதிவண்டி நிலையம்’
  ‘முடிதிருத்தும் நிலையம்’
  ‘உலர்சலவை நிலையம்’