தமிழ் நிவாரணம் யின் அர்த்தம்

நிவாரணம்

பெயர்ச்சொல்

 • 1

  (புயல், வெள்ளம், வறட்சி போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களின்) துயரத்தைக் குறைக்கும் வகையில் வழங்கும் (பணம், பொருள் ரீதியான) உதவி.

  ‘தீ விபத்தில் குடிசைகளை இழந்தோருக்கு நிவாரணத் தொகை அளிக்கப்படும்’
  ‘வெள்ளப் பகுதியில் மாட்டிக்கொண்டவர்களுக்கு நிவாரணப் பொருள்கள் விமானத்திலிருந்து வீசப்பட்டன’
  ‘வறட்சி நிவாரணப் பணிக்கென அரசு நூறு கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது’

 • 2

  (நலிவடைந்தவர்களுக்கு அளிக்கப்படும்) உதவித்தொகை.

  ‘வேலை கிடைக்காமல் இருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு அரசு நிவாரணம் அளிக்கிறது’
  ‘சிறுதொழில் தொடங்குவோருக்கு அரசு நிவாரணம் அளிக்க முன்வர வேண்டும்’
  ‘1986ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கும் நிவாரணம் கொடுக்கப்பட வேண்டும்’

 • 3

  (நோய்) நீக்கம்; குணம்/(பிரச்சினைக்கு) தீர்வு.

  ‘இது தலைவலிக்கு உடனடியாக நிவாரணம் அளிக்கும் மருந்து’
  ‘புற்றுநோய்க்கு நிரந்தர நிவாரணம் அளிக்கும் மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை’
  ‘குடித்தனக்காரரும் வீட்டுக்காரரும் ஒத்துப்போக முடியாத சூழ்நிலைகளில் சட்டத்தின் மூலம் நீதிமன்றத்தில்தான் நிவாரணம் பெற முடியும்’