நீர் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

நீர்1நீர்2நீர்3

நீர்1

வினைச்சொல்நீர்க்க, நீர்த்து

 • 1

  (திரவத்தின்) அடர்த்தியைக் குறைத்தல்; (மோர் போன்றவற்றில்) நீர் கலந்து நீர்த்தன்மையை அதிகமாக்குதல்.

  ‘நீர்த்த மோராக இருந்தாலும் குடிப்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது’
  உரு வழக்கு ‘மேலும்மேலும் தகவல்களைச் சேர்த்ததால் கருத்து நீர்த்துப்போய்விட்டது’

 • 2

  (சுண்ணாம்பில்) நீர் சேர்த்துக் குழைத்தல்.

நீர் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

நீர்1நீர்2நீர்3

நீர்2

பெயர்ச்சொல்

 • 1

  தண்ணீர்.

  ‘ஆற்று நீர்ப் பாசனம்’
  ‘பூமியின் மேற்பரப்பு சுமார் 75 சதவீதம் நீரால் சூழப்பட்டுள்ளது’
  ‘கடல் நீரிலிருந்து உப்பு எடுக்கிறோம்’
  ‘தொட முடியாத அளவுக்கு நீர் சில்லென்று இருந்தது’
  ‘நீரை உறைய வைத்து ஐஸ் தயாரிக்கப்படுகிறது’
  ‘பூசணிக்காய் நன்றாக வெந்ததும் நீரை வடித்துவிடவும்’
  ‘சென்னையின் கடலோரப் பகுதிகளில் நிலத்தடி நீரின் உப்புத் தன்மை அதிகரித்துவருகிறது’

 • 2

  (‘கண்’ என்பதோடு இணைந்து) கண்ணீர்.

  ‘அவள் கண்ணில் நீர் ததும்ப நின்றாள்’
  ‘அவன் தங்கை கண்களில் நீர் தளும்ப விடைகொடுத்தாள்’
  ‘அவர் கண்களில் நீர் துளிர்த்தது’

 • 3

  (கொப்புளம் போன்றவற்றிலிருந்து வெளிப்படும் அல்லது உடலின் குறிப்பிட்ட பகுதியில் சேரும்) கிருமிகள் நிறைந்த நிறமற்ற திரவம்.

  ‘புண்ணில் நீர் கோர்த்திருக்கிறது’
  ‘எனக்கு ஜலதோஷத்தின் காரணமாக மூக்கில் நீர் ஒழுக்கு இருந்தது’

 • 4

  சிறுநீர்.

  ‘உடலில் சுண்ணாம்புச் சத்து அதிகமாக இருந்தால் அப்போது நீர் அதிகமாகப் பிரியலாம்’

நீர் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

நீர்1நீர்2நீர்3

நீர்3

பிரதிப்பெயர்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு (ஆண்களைக் குறித்து வரும்போது) ‘நீ’ என்ற முன்னிலை ஒருமைச் சொல்லைவிட மரியாதை கூடியதாகவும் ‘நீங்கள்’ என்ற முன்னிலை மரியாதைச் சொல்லைவிட மரியாதையில் குறைந்ததாகவும் உள்ள முன்னிலைப் பிரதிப்பெயர்.

  ‘எங்கள் குடும்ப விஷயத்தில் நீர் தலையிட வேண்டியதில்லை’
  ‘நீராவது தலையிட்டு இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணக் கூடாதா?’
  ‘நீரும் உம் பையனும்!’