தமிழ் நுகர்பொருள் யின் அர்த்தம்

நுகர்பொருள்

பெயர்ச்சொல்

  • 1

    மக்கள் அன்றாடத் தேவைகளுக்காக வாங்கிப் பயன்படுத்தும் பொருள்.

    ‘தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திடம் தேவையான அளவுக்கு அரிசி கையிருப்பில் உள்ளது’
    ‘நுகர்பொருள் விற்பனையில் போதிய அனுபவம் உள்ளவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்’
    ‘நுகர்பொருளுக்கான சந்தை வளர்ந்துகொண்டேயிருக்கிறது’