நுழை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

நுழை1நுழை2

நுழை1

வினைச்சொல்நுழைய, நுழைந்து, நுழைக்க, நுழைத்து

 • 1

  (குறுகிய இடைவெளி கொண்ட ஒன்றின் வழியாக) செல்லுதல்; புகுதல்.

  ‘பூனையைக் கண்டதும் எலி வளையில் நுழைந்துகொண்டது’
  ‘கூட்டத்தில் நுழைந்து போனான்’

 • 2

  (ஊரினுள், கட்டடத்திற்குள்) வருதல்; (ஓர் இடத்தில்) பிரவேசித்தல்.

  ‘பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் கிராமத்தில் நுழைகிறேன்’
  ‘தோட்டத்திற்குள் நுழைந்த மாடுகள் எல்லாவற்றையும் மேய்ந்துவிட்டன’
  ‘அலுவலகத்திற்குள் நுழைந்தபோது மின்சாரம் தடைபட்டிருந்தது’

 • 3

  (ஒரு துறையில், போட்டியின் ஒரு கட்டத்தில்) இடம்பெறுதல்.

  ‘இந்தக் காலத்தில் பெண்கள் நுழையாத துறையே இல்லை’
  ‘தேர்வில் வெற்றிபெற்றுக் காவல்துறையில் நுழைந்துவிட்டார்’
  ‘அவர் மிக இளம் வயதிலேயே திரைப்படத் துறையில் நுழைந்தார்’
  ‘இந்திய அணி இரண்டாவது சுற்றில் நுழைந்துள்ளது’

 • 4

  (‘வாய்’ என்பதோடு இணைந்து வரும்போது) உச்சரிக்கும்படியாக இருத்தல்.

  ‘அந்த அமெரிக்கரின் பெயர் வாயில் நுழையவில்லை’
  ‘வாயில் நுழையாத ஒரு பெயரை உன் மகனுக்கு வைத்திருக்கிறாயே?’

நுழை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

நுழை1நுழை2

நுழை2

வினைச்சொல்நுழைய, நுழைந்து, நுழைக்க, நுழைத்து

 • 1

  (குறுகிய இடைவெளி வழியே ஒன்றை) போகச்செய்தல்; விடுதல்.

  ‘குளிர் அதிகமாக இருந்ததால் கால்சட்டைப் பைக்குள் கைகள் இரண்டையும் நுழைத்துக்கொண்டான்’
  ‘பூட்டில் சாவியை நுழைக்க முடியவில்லை’

 • 2

  (சிரமத்துடன் ஒரு வேலையில்) சேர்த்தல்/(பட்டியலில்) இடம் பெறச்செய்தல்.

  ‘என் பையனை ஒரு வேலையில் நுழைத்துவிட வேண்டும்’
  ‘வேட்பாளர்கள் பட்டியலில் தனக்கு வேண்டியவர்களின் பெயர்களை நுழைத்துவிட்டதாக அவர்மேல் ஒரு குற்றச்சாட்டு எழுந்தது’