தமிழ் நூல் பிடித்தாற்போல் யின் அர்த்தம்

நூல் பிடித்தாற்போல்

வினையடை

  • 1

    (வரிசையில், ஒழுங்கில்) மிக நேர்த்தியாக.

    ‘குடியரசு தின விழா அணி வகுப்பில் ராணுவ வீரர்கள் நூல் பிடித்தாற்போல் நடந்து சென்றனர்’
    ‘அவர் அறையில் ஆயிரக் கணக்கான புத்தகங்கள் இருந்தாலும் அனைத்தையும் நூல் பிடித்தாற்போல் அடுக்கிவைத்திருப்பார்’