தமிழ் நெருக்கம் யின் அர்த்தம்

நெருக்கம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (இடைவெளி அதிகம் இல்லாமல்) அருகருகே இருப்பது.

  ‘அவனுக்குப் பக்கத்தில் நெருக்கமாக உட்கார்ந்துகொண்டாள்’
  ‘இழைகள் நெருக்கமாகப் பின்னப்பட்ட ஆடை’
  ‘நெருக்கமாக அமைந்த வீடுகள்’
  ‘நாற்றுகளை மிகவும் நெருக்கமாக நடக் கூடாது’

 • 2

  நீண்ட காலமாகக் கொண்டிருக்கும் தொடர்பின் காரணமாகவும் நம்பிக்கையின் அடிப்படையிலும் உருவாகும் உறவு அல்லது நட்பு.

  ‘எங்கள் நெருக்கம் பலருக்கு எரிச்சலைத் தந்தது’
  ‘நெருக்கமான சில நண்பர்களை மட்டுமே விருந்துக்கு அழைத்திருந்தார்’
  ‘சில அரசியல்வாதிகளுடன் அவருக்கு நெருக்கமான தொடர்பு உண்டு’

 • 3

  மிகுந்த ஒற்றுமை.

  ‘நெருக்கமான தொடர்புடைய மொழிகள்’
  ‘நடனத்திற்கும் இசைக்கும் நெருக்கமான உறவு உண்டு’