தமிழ் நெருங்கு யின் அர்த்தம்

நெருங்கு

வினைச்சொல்நெருங்க, நெருங்கி

 • 1

  (ஓர் இடத்தை, ஒன்றை, ஒருவரை) அணுகுதல்.

  ‘ஊர்வலம் கடற்கரையை நெருங்கியது’
  ‘நான் கோயிலை நெருங்கும்போது நண்பர் எதிரே வருவதைப் பார்த்தேன்’
  ‘அவர் கோபமாக இருப்பதால் எல்லோரும் அவரை நெருங்கப் பயப்படுகிறார்கள்’

 • 2

  (ஒரு நிகழ்ச்சி நடக்கவிருக்கும் அல்லது ஒன்றைச் செய்ய வேண்டிய நேரம்) அருகில் வருதல்; (அடைய வேண்டிய இடம்) அருகில் வருதல்.

  ‘தீபாவளி நெருங்கிவிட்டது’
  ‘சாப்பிடும் நேரம் நெருங்கியதும் வேலையும் துரிதமாக நடைபெற்றது’
  ‘மதுரை நெருங்கிவிட்டது’

 • 3

  (உறவில், கொள்கையில் வேற்றுமை குறைந்து) நெருக்கமாக ஆதல்.

  ‘எதிரும்புதிருமாக இருந்த கட்சிகள் இப்போது நெருங்கிவருகின்றன’