தமிழ் நொடி யின் அர்த்தம்

நொடி

வினைச்சொல்நொடிய, நொடிந்து, நொடிக்க, நொடித்து

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு ஒடிதல்.

  ‘பந்தல் கால் நொடிந்து கீழே விழுந்துவிட்டது’

 • 2

  பேச்சு வழக்கு மனம் தளர்தல்; ஒடிதல்.

  ‘மனைவி இறந்த பிறகு கிழவர் மிகவும் நொடிந்துவிட்டார்’

தமிழ் நொடி யின் அர்த்தம்

நொடி

வினைச்சொல்நொடிய, நொடிந்து, நொடிக்க, நொடித்து

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு ஒடித்தல்.

  ‘சுள்ளியை நொடிக்கிற மாதிரி கையை நொடித்துப்போடுவேன்’

 • 2

  பேச்சு வழக்கு சாய்த்தல்.

  ‘மூட்டையை வலது கைப்பக்கம் கொஞ்சம் நொடி’

 • 3

  பேச்சு வழக்கு (பொதுவாகப் பெண்கள்) (சம்மதம் இல்லை அல்லது பிடிக்கவில்லை என்பதைத் தெரிவிப்பதற்குத் தலையை) ஒரு பக்கமாகப் பட்டென்று திருப்பித் தோள்பட்டையில் இடித்தல்.

  ‘கேள்விக்குப் பதில் சொல்லாமல் கழுத்தை நொடித்துவிட்டுப் போய்விட்டாள்’

தமிழ் நொடி யின் அர்த்தம்

நொடி

பெயர்ச்சொல்

 • 1

  வினாடி.

  ‘இப்போது நேரம் எட்டு மணி முப்பது நிமிடம் நாற்பது நொடி’

 • 2

  (கண்ணை இமைப்பதற்கு அல்லது விரலைச் சொடுக்குவதற்கு ஆகும் நேரம் போன்ற) மிகக் குறைவான நேரம்.

  ‘ஒரு நொடியில் வந்துவிடுகிறேன்’

தமிழ் நொடி யின் அர்த்தம்

நொடி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு புதிர்; விடுகதை.

தமிழ் நொடி யின் அர்த்தம்

நொடி

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு (சாலையில் காணப்படும்) பள்ளம்.

  ‘பார்த்து வண்டியை ஓட்டு; ஏதாவது நொடி இருக்கப்போகிறது’