தமிழ் நொதி யின் அர்த்தம்

நொதி

வினைச்சொல்நொதிக்க, நொதித்து

  • 1

    (காடி முதலியவை) புளித்தல்.

    ‘சில பழச்சாறுகளை நொதிக்கவைப்பதன் மூலம் மதுபானம் தயாரிக்கப்படுகிறது’

தமிழ் நொதி யின் அர்த்தம்

நொதி

பெயர்ச்சொல்

வேதியியல்
  • 1

    வேதியியல்
    உயிரினங்களின் உடலினுள் வேதியியல் மாற்றங்களை ஏற்படுத்தும், கிரியா ஊக்கியாகச் செயல்படும் சுரப்பு.