தமிழ் நேர்முகம் யின் அர்த்தம்

நேர்முகம்

பெயர்ச்சொல்

 • 1

  (ஒருவரை) நேரடியாகச் சந்தித்து நிகழ்த்தும் உரையாடல்; பேட்டி; நேர்காணல்.

  ‘பிரபல எழுத்தாளருடன் இன்று தொலைக்காட்சியில் நேர்முகம்’

 • 2

  நேருக்கு நேர் நிகழ்த்தப்படுவது; நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குவது.

  ‘கொரில்லாப் போர்முறை நேர்முகப் போர்முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது’
  ‘சண்டையிடும் நாடுகள் சண்டையை நிறுத்திவிட்டு நேர்முகப் பேச்சைத் துவக்க வேண்டும்’