நோண்டு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

நோண்டு1நோண்டு2

நோண்டு1

வினைச்சொல்நோண்ட, நோண்டி

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (விரல், குச்சி போன்றவற்றால்) குத்தி அல்லது நெம்பி வெளித்தள்ளுதல்.

  ‘செத்த மாட்டின் கண்களைக் காகம் நோண்டிக்கொண்டிருந்தது’
  ‘‘மூக்கை நோண்டாதே’ என்று அம்மா திட்டினாள்’

 • 2

  பேச்சு வழக்கு (அலமாரி, பெட்டி போன்றவற்றில்) ஏதோ ஒன்றைத் தேடும் முறையில் குடைந்து பார்த்தல்.

  ‘என் பெட்டியை எதற்காக நோண்டிக்கொண்டிருக்கிறாய்?’

நோண்டு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

நோண்டு1நோண்டு2

நோண்டு2

வினைச்சொல்நோண்ட, நோண்டி

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (நகத்தால் கிள்ளி) துண்டாக்குதல் அல்லது நீக்குதல்.

  ‘வெங்காயம் நோண்டிக் கொடு’
  ‘புகையிலையை நோண்டி வாய்க்குள் போட்டுக்கொண்டான்’
  ‘மீன் செதிளை நோண்டிவிட்டு நன்றாகக் கழுவு’
  ‘புண்ணை நோண்டாதே’