தமிழ் பக்கபலம் யின் அர்த்தம்

பக்கபலம்

பெயர்ச்சொல்-ஆக

 • 1

  (ஒருவருக்கு அல்லது ஒரு அமைப்புக்கு) துணையாக இருந்து ஊக்குவிக்கும் வகையில் அல்லது சிறப்பாகச் செயல்படும் வகையில் அமையும் ஆதரவு.

  ‘கட்சியை நடத்துவதில் இளைஞர்கள் எனக்குப் பெரிய பக்கபலம்’
  ‘அப்பா இறந்த பிறகு குடும்பத்திற்கு உன் மாமாதான் பக்கபலமாக இருந்தார்’
  ‘டெண்டுல்கருக்குப் பக்கபலமாக அடுத்து வந்த வீரர்கள் விளையாடியதால் இந்திய அணி வெற்றிபெற்றது’
  ‘கச்சேரியில் வயலினும் மிருதங்கமும் பாட்டுக்குப் பக்கபலமாக அமைந்தன’