தமிழ் பக்குவம் யின் அர்த்தம்

பக்குவம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (குறிப்பிட்ட உணவுக்கே உரிய) திட அல்லது திரவ நிலையோ சுவையோ அளவாக இருக்க வேண்டிய தன்மை.

  ‘சரியான பக்குவத்தில் இறக்காவிட்டால் பாகு இறுகிவிடும்’
  ‘அல்வாவில் எல்லாம் பக்குவமாக இருக்கிறது’

 • 2

  (தாவரங்களில் காய்த்தல், பூத்தல் முதலியவற்றுக்கான) பருவம்.

  ‘மாமரம் காய்க்கும் பக்குவத்தில் இருக்கிறது’
  ‘பயிர் பூக்கும் பக்குவத்துக்கு வந்துவிட்டது’

 • 3

  (ஒருவரின்) நிலை அறிந்து செயல்படும் தன்மை; (பிரச்சினை முதலியவற்றை) சமாளிக்கத் தேவையான முதிர்ச்சி; பாங்கு; (ஒன்றைச் செய்வதில்) நயம்.

  ‘அவர் கோபக்காரர்தான், இருந்தாலும் பக்குவமாக எடுத்துச் சொன்னால் புரிந்துகொள்வார்’
  ‘பக்குவமான வாசகர்கள் ஒரு நல்ல எழுத்தாளரிடம் மேலும்மேலும் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள்’