தமிழ் பகிர் யின் அர்த்தம்

பகிர்

வினைச்சொல்பகிர, பகிர்ந்து

 • 1

  (இருப்பதைத் தேவையின் அடிப்படையில்) பிரித்தல்; பங்கிடுதல்.

  ‘இந்த வேலையை நாம் மூவரும் பகிர்ந்துகொண்டால் சீக்கிரம் முடித்துவிடலாம்’
  ‘இருப்பது ஒரு ஏக்கர். அதை எத்தனை பேருக்குப் பகிர்வது?’
  ‘நிலம் இல்லாதவர்களுக்கு அரசாங்கம் சரியான முறையில் நிலத்தைப் பகிர்ந்தளிக்க வேண்டும்’
  ‘இருக்கும் இனிப்புகளை எல்லாக் குழந்தைகளுக்கும் பகிர்ந்து கொடு’