தமிழ் பங்களி யின் அர்த்தம்

பங்களி

வினைச்சொல்-அளிக்க, -அளித்து

  • 1

    பங்களிப்புச் செய்தல்.

    ‘சுதந்திரப் போராட்டத்தின்போது நாடகம், பத்திரிகைகள் போன்றவை முக்கியப் பங்களித்துள்ளன’
    ‘சமூக வளர்ச்சியில் தகவல்தொடர்பு சாதனங்கள் பெருமளவில் பங்களிக்கின்றன’
    ‘மாநிலங்கள் அனைத்தும் வளம்பெற இந்த நதிநீர் இணைப்புத் திட்டம் பங்களிக்கும்’