தமிழ் பங்காளி யின் அர்த்தம்

பங்காளி

பெயர்ச்சொல்

 • 1

  தந்தையின் சகோதரன் வழியில் உறவினர்.

  ‘சொத்தைப் பிரித்துக்கொள்வதில் பங்காளிகளிடையே சண்டை’
  ‘பங்காளிகள் வீட்டில் சாவு என்றால் நாங்கள் ஒரு வருடம்வரை துக்கம் கடைப்பிடிப்போம்’

 • 2

  சொத்தில் உரிமை அல்லது பங்கு உடையவர்.

 • 3

  நிறுவனம் முதலியவற்றில் உரிமை அல்லது பங்கு உடையவர்.

  ‘கடையின் பங்காளிகளுக்குள் பிரச்சினை ஏற்பட்டதால் கடையை மூடிவிட்டார்கள்’
  ‘நிறுவனத்தின் தொழிலாளர்களையும் பங்காளிகளாகக் கருத வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது’