தமிழ் பங்கீடு யின் அர்த்தம்

பங்கீடு

பெயர்ச்சொல்

 • 1

  (ஒவ்வொருவருக்கும் அல்லது ஒவ்வொன்றுக்கும்) இவ்வளவு எனப் பிரிக்கும் முறை; பகிர்வு.

  ‘நதி நீர்ப் பங்கீடுபற்றிய பேச்சுவார்த்தை’
  ‘தொகுதிப் பங்கீட்டைப் பற்றி இரு கட்சிகளும் கூடிப் பேசி முடிவெடுக்கும்’

 • 2

  இசைத்துறை
  (கச்சேரியில்) பாடப்படும் உருப்படிகளின் இசைச் செறிவு, பொருட்செறிவு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு அதற்கேற்றாற்போல் கச்சேரியின் முழு நேரத்தையும் பகிர்ந்துகொண்டு பாடும் முறை.

  ‘பாடகரின் ராகப் பங்கீடும் கற்பனை வளமும் அற்புதம்’
  ‘கச்சேரியில் கீர்த்தனை நல்ல பங்கீடுகளுடன் அமைந்திருந்தது’