தமிழ் பசப்பு யின் அர்த்தம்

பசப்பு

வினைச்சொல்பசப்ப, பசப்பி

  • 1

    (தன் செயலை நிறைவேற்றிக்கொள்ள) ஒருவரின் அனுதாபத்தைப் பெறும் வகையில் பேசுதல் அல்லது நடந்துகொள்ளுதல்; பாசாங்குசெய்தல்.

    ‘பசப்பியே தன் காரியத்தைச் சாதித்துக்கொள்ளும் சாமர்த்தியசாலி’

தமிழ் பசப்பு யின் அர்த்தம்

பசப்பு

பெயர்ச்சொல்

  • 1

    பிறரின் அனுதாபத்தைப் பெறும் வகையிலான பேச்சு அல்லது நடவடிக்கை; பாசாங்கு.

    ‘அவனுடைய பசப்பு வார்த்தைகளை நம்பி ஏமாந்துவிடாதே!’