தமிழ் பஞ்சாயத்து யின் அர்த்தம்

பஞ்சாயத்து

பெயர்ச்சொல்

  • 1

    (முன்பு) கிராமங்களில் உருவாகும் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஊர்ப் பெரியவர்களின் குழு/அந்தக் குழு மேற்கொள்ளும் செயல்.

    ‘பஞ்சாயத்து விதித்த அபராதப் பணத்தைக் கட்ட நான் ஒப்புக்கொண்டேன்’
    ‘அப்பா ஊருக்கெல்லாம் பஞ்சாயத்து பண்ணிக்கொண்டிருப்பார்; ஆனால் வீட்டில் என்ன நடக்கிறதென்று பார்க்க மாட்டார்’

  • 2

    ஐநூறு பேர் கொண்ட, விவசாயத்தைச் சார்ந்திருக்கும் கிராமத்துக்கான உள்ளூர் ஆட்சி அமைப்பு.