தமிழ் பஞ்சு யின் அர்த்தம்

பஞ்சு

பெயர்ச்சொல்

 • 1

  (பருத்திச் செடியிலிருந்து கிடைக்கும்) திரவத்தை உறிஞ்சக்கூடிய, நுண்ணிய இழைகளாலான (பொதுவாக நூல் நூற்கப் பயன்படும்) கனமற்ற வெண்ணிறப் பொருள்.

  ‘பஞ்சிலிருந்து துணி நெய்யும் நூல் தயாரிக்கப்படுகிறது’
  ‘மருத்துவமனைகளில் கிருமிநீக்கப்பட்ட பஞ்சைப் பயன்படுத்துகிறார்கள்’
  ‘பஞ்சை எடுத்துப் புண்ணைச் சுத்தம் செய்துகொண்டான்’

 • 2

  இலவம் பஞ்சு.