தமிழ் பட்சத்தில் யின் அர்த்தம்

பட்சத்தில்

இடைச்சொல்

  • 1

    (எதிர்கால அல்லது நிகழ்காலப் பெயரெச்சத்தின் பின்) ‘(முன் குறிப்பிடப்படும் விதத்தில் ஒன்று நடக்கும் அல்லது இருக்கும்) சூழ்நிலையில்’ என்ற நிபந்தனைப் பொருளில் பயன்படுத்தும் இடைச்சொல்.

    ‘உங்களுக்குப் பணம் தேவைப்படும் பட்சத்தில் நான் தருகிறேன்’
    ‘தேர்தல் சுமுகமாக நடக்கும் பட்சத்தில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்’
    ‘திருமணம் வேண்டாம் என்று நீ மறுக்கிற பட்சத்தில் நாங்கள் என்ன செய்ய முடியும்?’