தமிழ் பட்டி யின் அர்த்தம்

பட்டி

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு சிற்றூர்; கிராமம்.

  ‘ஒவ்வொரு பட்டியாகப் போய்ச் செய்தியைச் சொல்லி வந்தான்’

தமிழ் பட்டி யின் அர்த்தம்

பட்டி

பெயர்ச்சொல்

 • 1

  பிறர் நிலத்தில் பயிர்களை மேயும் ஆடு, மாடு ஆகியவற்றை (உரிமையாளர் வந்து மீட்டுச் செல்லும்வரை) அடைத்துவைக்கும் இடம்.

  ‘பணம் கட்டிவிட்டு மாட்டைப் பட்டியிலிருந்து ஓட்டிக்கொண்டு வருகிறேன்’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு (வயல்களில் போடப்படும்) கிடை.

தமிழ் பட்டி யின் அர்த்தம்

பட்டி

பெயர்ச்சொல்

 • 1

  (சட்டை, பாவாடை முதலிய உடைகளில்) விளிம்பை மடித்துத் தைக்கும் பகுதி; மடிப்புத் தையல்.

தமிழ் பட்டி யின் அர்த்தம்

பட்டி

பெயர்ச்சொல்

 • 1

  மாத்திரைகளை அல்லது குழாய் மாத்திரைகளைப் பாதுகாப்பாக வைத்து மூடப் பயன்படுத்தும் பிளாஸ்டிக், கண்ணாடித் தாள் போன்றவற்றைக் கொண்ட அட்டை.

  ‘பறவைக்காய்ச்சலுக்கு எடுத்துக்கொள்ளக் கூடிய மாத்திரைகள் பத்து அடங்கிய பட்டிகளில் கிடைக்கின்றன’

தமிழ் பட்டி யின் அர்த்தம்

பட்டி

பெயர்ச்சொல்

 • 1

  (சுவர், மரச் சாமான்கள் போன்றவற்றில் வர்ணம் பூசும் வேலையைத் துவக்குவதற்கு முன்) அதன் பரப்பைச் சமப்படுத்தும் பொருட்டு பயன்படுத்தும் மெழுகு போன்ற பொருள்.

  ‘இரும்புக்கடைக்குப் போய் ஒரு கிலோ பட்டி வாங்கி வா’