தமிழ் படிமானம் யின் அர்த்தம்

படிமானம்

பெயர்ச்சொல்

 • 1

  ஒரு பரப்பில் படிந்திருப்பது.

  ‘ஆற்றின் முகத்துவாரத்தில் வண்டல் மண்ணின் படிமானம் மிகுதியாக உள்ளது’

 • 2

  பேச்சு வழக்கு ஒரு பரப்பில் சமமாகப் படிந்திருக்கும் நிலை.

  ‘புத்தகத்தைப் படிமானமாக வை’
  ‘தரையில் படிமானமாக வைக்காவிட்டால் பீரோ சாய்ந்துவிடும்’
  ‘சுருக்கமோ மடிப்போ இல்லாமல் மேசையின் மேல் விரிப்பைப் படிமானமாக விரிக்க வேண்டும்’