தமிழ் படியெடு யின் அர்த்தம்

படியெடு

வினைச்சொல்-எடுக்க, -எடுத்து

  • 1

    (கல்வெட்டு போன்றவற்றின்) வெட்டப்பட்ட எழுத்துகளில் காகிதத்தைப் பதித்துப் பிரதி உருவாக்குதல்.

    ‘அரிய கல்வெட்டுகளைப் படியெடுப்பதற்காக அரசு 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது’

  • 2

    (எழுதப்பட்டதை, அச்சிடப்பட்டதை) பிரதி எடுத்தல்.

    ‘என் கட்டுரைகளைப் படியெடுத்துக் கொடுத்த என் மனைவிக்கு நன்றி’