தமிழ் படுக்கையில் தள்ளிவிடு யின் அர்த்தம்

படுக்கையில் தள்ளிவிடு

வினைச்சொல்-விட, -விட்டு

  • 1

    (நோய், முதுமை அல்லது தொடர்ந்து வருத்தும் கவலை ஒருவரை) எழுந்து நடமாட முடியாத நிலைக்கு உள்ளாக்குதல்.

    ‘சாதாரண வயிற்றுவலி என்று அலட்சியமாக இருந்துவிட்டார். இப்போது அதுவே அவரைப் படுக்கையில் தள்ளிவிட்டது’
    ‘மகள் இறந்த துக்கமே அவரைப் படுக்கையில் தள்ளிவிட்டது’