தமிழ் படைப்பு யின் அர்த்தம்

படைப்பு

பெயர்ச்சொல்

 • 1

  கலை உணர்வுடன் புதிதாக உருவாக்கப்படும் கலை, இலக்கிய வடிவங்களில் ஒன்று.

  ‘இந்த நாட்டிய நாடகம்தான் எங்களுடைய புதிய படைப்பு’
  ‘இவருடைய படைப்புகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன’
  உரு வழக்கு ‘இயற்கையின் படைப்புகளில் உயர்ந்தது தாழ்ந்தது என்று பிரிக்க முடியுமா?’

 • 2

  (கதைப் பாத்திர) உருவாக்கம்.

  ‘இவருடைய நாவலில் பாத்திரப் படைப்பு சிறப்பாக உள்ளது’

 • 3

  (தொழிற்சாலை போன்றவற்றில்) தயாரிக்கப்பட்டது.

  ‘எங்கள் நிறுவனத்தின் உன்னதப் படைப்பே இந்தத் தொலைக்காட்சிப் பெட்டி’

தமிழ் படைப்பு யின் அர்த்தம்

படைப்பு

பெயர்ச்சொல்