தமிழ் பண்படு யின் அர்த்தம்

பண்படு

வினைச்சொல்-பட, -பட்டு

 • 1

  (நிலம்) உழுது பயிரிடுவதற்கு ஏற்றவாறு சீரடைதல்.

  ‘காடாகக் கிடக்கும் நிலம் பண்பட நாளாகும்’
  ‘பண்படாத நிலத்தை வைத்துக்கொண்டு எதையும் விதைக்க முடியாது’

 • 2

  (மனம், நடந்துகொள்ளும் விதம் போன்றவை) பண்பட்ட நிலையை அடைதல்.

  ‘இசையால் மனம் பண்படும்’