தமிழ் பதறு யின் அர்த்தம்

பதறு

வினைச்சொல்பதற, பதறி

  • 1

    பதற்றமும் கலக்கமும் அடைதல்/(பயம், ஆபத்து போன்றவற்றால்) (கை, கால்) நடுங்குதல்.

    ‘செல்லமாக வளர்த்த பெண் என்பதால் சிறு காயத்துக்குக்கூடப் பதறிக்கொண்டு வைத்தியம் செய்வார்’
    ‘வீடு தீப் பற்றி எரிவதைப் பார்த்துக் கை, கால் பதற நின்றான்’
    ‘பதறாமல் தேடு; நீதான் மறந்துபோய் வளையலை எங்காவது வைத்திருப்பாய்’