தமிழ் பதற்றம் யின் அர்த்தம்

பதற்றம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  கவலை, பயம், தயக்கம், நிச்சயமின்மை போன்றவற்றால் செயல்படுவதில் நிதானம் இழந்த நிலை.

  ‘மருத்துவ அறிக்கையைக் கையில் வாங்கிப் பதற்றத்துடன் பிரித்தான்’
  ‘என்ன நடந்தது என்று பதற்றப்படாமல் சொல்லுங்கள்’

 • 2

  (கலவரம், போர், இயற்கைச் சீற்றம் முதலியவற்றால் ஒரு இடத்தில்) அடுத்து என்ன நடக் கும் என்று தெரியாத அளவுக்கு அச்சம் நிலவும் சூழல்.

  ‘பதற்றம் நிலவும் பகுதியில் ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது’
  ‘அதிபர் சுடப்பட்ட செய்தி நாடு முழுவதும் பதற்ற நிலையை ஏற்படுத்தியிருந்தது’