தமிழ் பதவிநீக்கம் யின் அர்த்தம்

பதவிநீக்கம்

பெயர்ச்சொல்

 • 1

  பணிநீக்கம்.

  ‘அலுவலகப் பணத்தைக் கையாடல் செய்ததற்காக அவர் பதவிநீக்கம் செய்யப்பட்டார்’
  ‘பதவிநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர்’

 • 2

  (குடியாட்சி முறையில்) தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அதிகாரம் இழக்கச் செய்யும் நடவடிக்கை.

  ‘அந்த மாநிலத்தில் சிறுபான்மை அரசு பதவிநீக்கம் செய்யப்பட்டுக் குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டுள்ளது’