தமிழ் பதிலீடு யின் அர்த்தம்

பதிலீடு

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு (ஒரு செயலுக்கு அல்லது பொருளுக்கு) இணையான மற்றொன்று; ஈடு.

    ‘அவன் செய்த உதவிக்கெல்லாம் என்னால் எதுவும் பதிலீடாகச் செய்ய முடியாது’
    ‘பிறமொழிச் சொற்களுக்குச் சிலர் தமிழ் மொழிச் சொற்களைப் பதிலீடு செய்கின்றனர்’
    ‘மீத்தேனில் உள்ள நான்கு ஹைட்ரஜன்களையும் குளோரின் பதிலீடு செய்கிறது’