தமிழ் பதிவுசெய் யின் அர்த்தம்

பதிவுசெய்

வினைச்சொல்-செய்ய, -செய்து

 • 1

  (ஒன்றைப் பெறுவதற்கான விபரங்களை விண்ணப்பத்தில்) குறித்துத் தருதல்.

  ‘வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெயரைப் பதிவுசெய்துவிட்டு வருகிறேன்’
  ‘வாக்காளர் அட்டைக்குப் பதிவுசெய்துவிட்டாயா?’

 • 2

  (வழக்குகள், விவரங்கள் போன்றவற்றை) முறைப்படி குறித்தல்.

  ‘கொலை தொடர்பாக அவன்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது’
  ‘உன் திருமணத்தை முறைப்படி பதிவுசெய்துவிட்டாயா?’