தமிழ் பதுக்கு யின் அர்த்தம்

பதுக்கு

வினைச்சொல்பதுக்க, பதுக்கி

 • 1

  (பொருள், பணம் முதலியவற்றை) சட்டவிரோதமாக மறைத்துவைத்தல்.

  ‘கிடங்கில் பதுக்கி வைத்திருந்த நூறு மூட்டை நெல்லைக் காவல்துறையினர் கைப்பற்றினர்’
  ‘சிலர் வெளிநாட்டு வங்கிகளில் பணத்தைப் பதுக்கியுள்ளது தெரியவந்தது’

 • 2

  (ஒன்றைப் பிறர் கண்டுபிடிக்க முடியாதவாறு) மறைத்துவைத்தல்; ஒளித்துவைத்தல்.

  ‘பாக்கி பட்டாசை எங்கே பதுக்கிவைத்திருக்கிறாய் என்று சொல்’