பனி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பனி1பனி2

பனி1

வினைச்சொல்பனிக்க, பனித்து

 • 1

  (புற்கள், இலைகள் போன்றவற்றில் பனி அல்லது கண்களில் கண்ணீர்) துளிர்த்தல்.

  ‘இலைகளில் முத்துப்போல் பனித்திருந்த பனித் துளிகள்’
  ‘அவள் கண்கள் பனிக்கக் கிளம்பினாள்’

பனி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பனி1பனி2

பனி2

பெயர்ச்சொல்

 • 1

  (குளிர் காலத்தில்) காற்றில் உணர்கிற குளிர்ச்சி அல்லது காற்றில் இறங்குகிற ஈரம்.

  ‘இந்தப் பனி பெய்யும் இரவில் ஏன் வெளியே போகிறாய்?’

 • 2

  நீராவி குளிர்ந்து ஏற்படும் துளி.

  ‘இலைகளின் மேல் முத்துமுத்தாகப் பனி காணப்பட்டது’

 • 3

  (குளிர் பிரதேசங்களில்) வெண்ணிறத் துகள்களாக மழைபோல் பொழியும் அல்லது வெண்ணிறக் கட்டியாகப் படிந்திருக்கும் உறைந்த நீர்.

  ‘பனி மூடிய மலைச் சிகரங்கள்’