தமிழ் பயன்படுத்து யின் அர்த்தம்

பயன்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    (தேவையை நிறைவேற்றும் பொருட்டு அல்லது நன்மை, வசதி போன்றவற்றைப் பெறும் பொருட்டு ஒன்றை) கையாளுதல்; பயன்படச் செய்தல்; உபயோகித்தல்.

    ‘இருக்கும் மூல வளங்களை முறையாகப் பயன்படுத்திப் பல தொழிற்சாலைகளை நிறுவலாம்’
    ‘தன் தந்தைக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி அவன் பல காரியங்களைச் சாதித்துக்கொள்கிறான்’
    ‘அடுத்தவர் என்ன சொல்கிறாரோ அதையே பிடித்துக்கொள்கிறார்களே தவிர யாரும் தமது மூளையைப் பயன்படுத்துவதில்லை’